பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவித்த ஈபிஎஸ்..!

Default Image

எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி அவர்கள், வேளாண் சட்டங்களை ரத்து செய்ததற்கு பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவித்து ட்வீட். 

மத்திய அரசு கொண்டு வந்த வேளாண் சட்டங்களுக்கு எதிராக தலைநகர் டில்லியில் பஞ்சாப், ஹரியானா உள்ளிட்ட மாநிலங்களில் விவசாயிகள், விவசாய சங்கங்கள் கடந்த ஓராண்டிற்கும் மேலாக போராட்டத்தில் ஈடுபட்டு வந்த நிலையில், தற்போது பிரதமர் மோடி அவர்கள் இந்த மூன்று வேளாண் சட்டங்களும் ரத்து செய்யப்படுவதாக அறிவித்துள்ளார்.

இந்நிலையில், இந்த அறிவிப்பிற்கு வரவேற்பு தெரிவித்து அரசியல் கட்சி தலைவர்கள் பலரும் தங்களது வரவேற்புகளை தெரிவித்து வருகின்றனர். அந்தவகையில், எதிர்க்கட்சி தலைவர்  பழனிசாமி அவர்கள் தனது ட்விட்டர் பக்கத்தில், ‘வேளாண் சட்டங்களை வாபஸ் பெற்றமைக்கும்,குறைந்தப்பட்ச ஆதார விலை (MSP) நிர்ணயம் செய்ய குழு அமைக்கப்படும் என அறிவித்தமைக்கும் எனது நன்றிகளை மாண்புமிகு பாரத பிரதமர் நரேந்திரமோடி அவர்களுக்கு தெரிவித்து கொள்கிறேன்.’ என பதிவிட்டுள்ளார். 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

rain news live
mums (1)
vetri,vaishnavi (1)
Thirumavalavan
Vetrimaaran
Red Alert rain
Weather Update in Tamilnadu