டிசம்பர் மாதம் ஜெயிலில் இருந்து ரிலீஸ் ஆகி ரசிகர்களை சந்திக்கும் ஜி.வி.பிரகாஷ்.!

டிசம்பர் 9ஆம் தேதி வசந்தபாலன் இயக்கி ஜி.வி.பிரகாஷ் நடித்துள்ள ஜெயில் திரைப்படம் வெளியாகும் அறிவிக்கப்பட்டுள்ளது.
வெயில், அங்காடி தெரு, அரவான், காவிய தலைவன் என சிறந்த படங்களை இயக்கி நல்ல இயக்குனர் என பெயர் வாங்கியவர் இயக்குனர் வசந்தபாலன். இவர் இயக்கத்தில் அடுத்ததாக ஜெயில் திரைப்படம் ரிலீஸ் ஆக உள்ளது.
இந்த படத்தில் ஜி.வி.பிரகாஷ் குமார் கதாநாயகனாக நடிக்கிறார். அபர்ணாதி ஹீரோயினாக நடிக்கிறார். ஜி.வி.பிரகாஷ் குமார் தான் இப்படத்திற்கு இசை அமைத்துள்ளார். இப்படத்தை ஸ்டூடியோ க்ரீன் நிறுவனம் வெளியிடுகிறது.
இப்படம் தயாராகி பல மாதங்களாக பெட்டிக்குள் அடங்கி இருக்கிறது. இப்படம் எப்போது ரிலீஸ் ஆகும் என ரசிகர்கள் காத்திருந்தனர். ஏனென்றால், நல்ல பட இயக்குனர் வசந்தபாலன் இயக்கத்தில் படம் வெளியாகி வருடங்கள் உருண்டோடிவிட்டன. வெகு வருடம் கழித்து இந்த படம் வெளியாவதால், மீண்டும் சென்சேஷனல் ஹிட் கொடுப்பாரா என ரசிகர்கள் காத்திருகின்றனர்.
இப்படம் வரும் டிசம்பர் மாதம் 9ஆம் தேதி வெளியாக உள்ளதாக படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
ஐபிஎல்லை விட்டு விலகிய ருதுராஜ்! கேப்டனாக களமிறங்கும் தோனி!
April 10, 2025
கோவை தனியார் பள்ளி விவகாரம் – பள்ளியின் முதல்வர் சஸ்பெண்ட்!
April 10, 2025