பாலியல் சீண்டல் விவகாரம் -மும்பை நீதிமன்ற தீர்ப்பு ரத்து..!

சிறுமிகளை ஆறுக்கு மேல் தொட்டு பாலியல் தொல்லை தந்தால் போக்சோ போட முடியாது என்ற தீர்ப்பு ரத்து
சிறுமியை ஆடைக்கு மேல் மார்பை தொட்டு பாலியல் சீண்டலில் ஈடுபட்டதற்காக போக்சோ சட்டம் கீழ் நடவடிக்கை எடுக்க முடியாது என்ற மும்பை உயர்நீதிமன்ற தீர்ப்பை ரத்து செய்யப்பட்டுள்ளது. உச்சநீதிமன்றம் சட்டத்தின் நோக்கம் குற்றவாளி சட்டத்தின் ஓட்டைகளிலிருந்து தப்பிக்க அனுமதிக்கக்கூடாது. பாலியல் இச்சையோடு குழந்தையின் மர்ம உறுப்புகளை தொடுவது என்பது ஆடைக்கு மேலாக இருந்தாலும் அது பாலியல் சீண்டல் தான், போக்சோ சட்டத்துக்குள் வரும் என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.