#BREAKING: சென்னையிலிருந்து 340 கி.மீ.யில் காற்றழுத்த தாழ்வுப்பகுதி..!

சென்னையில் இருந்து தென்கிழக்கு திசையில் 340 கி.மீ. தொலைவில் ஆழ்ந்த காற்றழுத்த பகுதி மையம் கொண்டுள்ளது.
வங்கக்கடலில் நிலை கொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த பகுதி புதுச்சேரியில் இருந்து கிழக்கு தென்கிழக்கு திசையில் 300 கி.மீ. தொலைவிலும், சென்னையில் இருந்து தென்கிழக்கு திசையில் 340 கி.மீ. தொலைவிலும் மையம் கொண்டுள்ளது.
12 மணி நேரத்தில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடையும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.