நல்லமநாயுடு மறைவு : கனிமொழி எம்.பி இரங்கல் தெரிவித்து ட்வீட்..!

Default Image

நல்லமநாயுடு அவர்களின் மறைவுக்கு கனிமொழி எம்.பி அவர்கள் இரங்கல் தெரிவித்து ட்வீட் செய்துள்ளார்.

தமிழ்நாடு லஞ்ச ஒழிப்பு துறை முன்னாள் எஸ்.பி நல்லம நாயுடு. இவருக்கு வயது 83. இவர் உடல் நலக் குறைவு காரணமாக இன்று அதிகாலை சென்னை பெரவள்ளுரில் உள்ள அவரது இல்லத்தில் காலமானார். இவர், மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மீதான சொத்துக்குவிப்பு வழக்கின் விசாரணை அதிகாரியாக இருந்தவர் எனது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையி, நல்லமநாயுடு அவர்களின் மறைவுக்கு கனிமொழி எம்.பி அவர்கள் இரங்கல் தெரிவித்து ட்வீட் செய்துள்ளார். அந்த ட்விட்டர் பதிவில், ‘ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத்துறை எஸ்.பி., ஆக பணியாற்றி ஓய்வு பெற்ற நல்லம்ம நாயுடு அவர்கள் மறைந்த செய்தி வருத்தமளிக்கிறது. அவரது நேர்மையும், நீதியை நிலைநாட்ட அவர்கொண்ட துணிச்சலும் என்றும் போற்றப்படும். அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தாருக்கு எனது ஆழ்ந்த இரங்கல்.’ என பதிவிட்டுள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

Pahalgam terror attack video
Pahalgam Attack news
Kashmir Attack
america terrorist attack in kashmir
X account suspended
Kashmir to Chennai return