#Breaking:வன்னியர் 10.5% இட ஒதுக்கீடு ரத்து -உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு மேல்முறையீடு!

Default Image

வன்னியர்களுக்கான 10.5% உள் இட ஒதுக்கீடு அரசாணை ரத்து செய்யப்பட்ட விவகாரம் தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு மேல்முறையீடு செய்துள்ளது.

தமிழக அரசால் வன்னியர்களுக்கு வழங்கப்பட்ட  10.5% உள் இட ஒதுக்கீடு அரசாணையை ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை தீர்ப்பு வழங்கியது.

இந்நிலையில், வன்னியர்களுக்கான 10.5% உள் இட ஒதுக்கீடு அரசாணை ரத்து செய்யப்பட்டதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு மேல்முறையீடு செய்துள்ளது.100 பக்கங்களை கொண்ட அந்த மேல்முறையீட்டு மனுவில் கூறப்பட்டுள்ளதாவது:

“அரசியலமைப்பு சட்டத்தின்படி உள்ஒதுக்கீடு வழங்க மாநில அரசுகளுக்கு அதிகாரம் உள்ளதுஅந்த வகையில்,ஏற்கனவே,முஸ்லீம் பிரிவினருக்கு தனி இட ஒதுக்கீடும், அருந்ததியினருக்கு உள் ஒதுக்கீடும் வழங்கப்பட்டுள்ளது.கல்வி,வேலை வாய்ப்பில் மிகவும் பிற்படுத்தப்பட்டோருக்கான 20% இடஒதுகீட்டில் வன்னியருக்கு உள்ஒதுக்கீடு தரப்பட்டது.

இந்த தடை உத்தரவின் காரணமாக ஒட்டுமொத்த நிர்வாகமும் பெரும் இன்னல்களை சந்தித்துள்ளது.உயர்நீதிமன்ற மதுரைக் கிளையின் உத்தரவு தவறானது.தற்போதுள்ள சட்ட விதிகளுக்கு முரணாக உள்ளது.உள்ஒதுக்கீடு என்பது வன்னியர் சமூகத்தினருக்கு மட்டுமல்ல.மாறாக,7 பிரிவினருக்கானது.”,உள்ளிட்ட பல்வேறு விசயங்கள் அந்த மனுவில் தெரிவிக்கப் பட்டுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்