முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் சொத்துகுவிப்பு வழக்கை விசாரித்த முன்னாள் எஸ்.பி காலமானார்..!

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மீதான சொத்துக்குவிப்பு வழக்கின் விசாரணை அதிகாரியாக இருந்த லஞ்ச ஒழிப்பு துறை முன்னாள் எஸ்.பி நல்லம நாயுடு காலமானார்.
தமிழ்நாடு லஞ்ச ஒழிப்பு துறை முன்னாள் எஸ்.பி நல்லம நாயுடு. இவருக்கு வயது 83. இவர் உடல் நலக் குறைவு காரணமாக இன்று அதிகாலை சென்னை பெரவள்ளுரில் உள்ள அவரது இல்லத்தில் காலமானார்.
இவர் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மீதான சொத்துக்குவிப்பு வழக்கின் விசாரணை அதிகாரியாக இருந்தவர். ஜெயலலிதாவிற்கு எதிரான ஊழல் மற்றும் லஞ்ச புகார்களை விசாரித்து, அவரை கைது செய்து அவருக்கு எதிராக ஆறுமாதத்தில் குற்றப் பத்திரிக்கையும் தாக்கல் செய்தார். இதுதான் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா சொத்து குவிப்பு வழக்கில் தண்டனை பெற்று, முதல்வர் பதவியை இழக்க காரணமாக இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
லேட்டஸ்ட் செய்திகள்
உறுதியானது அதிமுக – பாஜக கூட்டணி! அமித்ஷா அறிவிப்பு!
April 11, 2025
தமிழ்நாடு பாஜகவின் 13வது தலைவராகிறார் நயினார் நாகேந்திரன்!
April 11, 2025