‘வலிமை சிமெண்ட்’ – இன்று அறிமுகம் செய்கிறார் முதல்வர் மு.க.ஸ்டாலின்…!
இன்று ‘வலிமை’ சிமெண்டை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் அறிமுகப்படுத்தி வைக்கிறார்.
கடந்த ஆகஸ்ட் மாதம் நடைபெற்ற சட்டப்பேரவையில் தொழில்துறை மானிய கோரிக்கை மீதான விவாதத்தின்போது தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு அவர்கள், தமிழக அரசு சிமெண்ட் ‘வலிமை’ என்ற புதிய வணிக பெயருடன் நடப்பாண்டு முதல் வெளிச்சந்தையில் அறிமுகப்படுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்த சிமெண்ட், தமிழக அரசின் டான்செம் நிறுவனம் சார்பில் குறைந்த விலையில் தயாரிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், இந்த ‘வலிமை’ சிமெண்டை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் அறிமுகப்படுத்தி வைக்கிறார். இந்த சிமெண்ட் அறிமுகத்தை மூலம், வெளிச்சந்தையில் சிமெண்ட் விலை குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.