மாணவிக்கு சைக்கிள் பரிசளித்த அமைச்சர் செஞ்சி மஸ்தான்..!கண்ணீருடன் நன்றி தெரிவித்த மாணவி..!
மாணவிக்கு சைக்கிள் பரிசளித்த அமைச்சர் செஞ்சி மஸ்தான்.
நேற்று நாடு முழுவதும் குழந்தைகள் தினம் கொண்டாடப்பட்டது. இந்நிலையில், திருவண்ணாமலை மாவட்டம், மகமாயி திருமணி பகுதியை சேர்ந்த 7-ஆம் வகுப்பு படிக்கும் மாணவி காவியா. இவர் தினமும் 4 கி.மீ பள்ளிக்கு நடந்தே சென்றுள்ளார்.
இதுதொடர்பாக, செஞ்சி அரசு விருந்தினர் மாளிகைக்கு சென்று, கோரிக்கை ஒன்றை வழங்கினார். இந்த மனு மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க உத்தரவிட்ட அமைச்சர், மாணவிக்கு சைக்கிள் பரிசளித்து, இனிப்பு வழங்கினார். அப்போது சைக்கிளை பெற்றுக் கொண்ட மாணவி அமைச்சருக்கு கண்ணீர் மல்க நன்றி தெரிவித்துள்ளார்.