எனது எருமை பால் கறக்க மறுக்கிறது – காவல் நிலையத்தில் விவசாயி புகார்!
எனது எருமை பால் கறக்க மறுக்கிறது என காவல் நிலையத்தில் மத்திய பிரதேசத்தை சேர்ந்த விவசாயி புகார் அளித்துள்ளார்.
மத்திய பிரதேச மாநிலம் பிந்த் மாவட்டத்தை சேர்ந்த 45 வயதுடைய பாபுலால் ஜாதவ் எனும் விவசாயி தனது எருமை மாடு பால் கறக்க மறுப்பதாக காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார் .மேலும் தனது எருமை மாட்டிற்கு யாரோ மாந்திரீகம் செய்துள்ளதாகவும், அதனால் தான் அது பால் கறக்க மறுக்கிறது எனவும் தனது கிராமவாசிகள் கூறுவதாவும் அவர் தனது புகாரில் தெரிவித்துள்ளார்.
இது குறித்து கூறிய போலீஸ் அதிகாரி அரவிந்த் ஷா, அந்த விவசாயிக்கு கால்நடை மருத்துவ ஆலோசனை வழங்கி உதவுமாறு காவல் நிலையத்தில் உள்ள பொறுப்பாளரிடம் கூறியதாகவும், அதன் பின் மீண்டும் காவல் நிலையத்திற்கு வந்த அந்த விவசாயி தனது எருமை தற்பொழுது பால் கறப்பதாக கூறி காவல் துறைக்கு நன்றி தெரிவித்தார் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.