கல்யாண வீட்டுல சாப்பிட்டது தப்பாப்பா ….! 50 பேர் மருத்துவமனையில் அனுமதி!
கர்நாடக மாநிலத்தில் நடந்த திருமண விழாவில் உணவு சாப்பிட்ட 50 க்கும் மேற்பட்டோர் உடல்நலக் குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
கர்நாடக மாநிலம் ஷிவமொக்காவில் உள்ள அலடா ஹள்ளி எனும் கிராமத்தில் கடந்த வெள்ளிக்கிழமை இரவு திருமண விழா ஒன்று நடைபெற்று உள்ளது. இந்த விழாவில் அப்பகுதியிலுள்ள பலர் கலந்து கொண்டுள்ளனர்.
இந்நிலையில், இந்த திருமண விழாவில் தயாரித்து வைத்திருந்த உணவுகளை சாப்பிட்ட நூற்றுக்கணக்கானோருக்கு உடல்நல குறைவு ஏற்பட்டதால் மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை எடுத்து உள்ளனர்.
அதிலும் 50 பேர் கடுமையான வயிற்றுப்போக்கு காரணமாக சனிக்கிழமை காலை ஷிவமொக்கா மாவட்ட மருத்துவமனைக்கு மாற்றப்பட்டு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இவர்கள் அனைவருக்குமே ஃபுட் பாய்சன் ஆகி உள்ளதாக மருத்துவர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.