BIGG BOSS 5 : கமல் சாரையும் கொஞ்சம் பேச விடுங்கம்மா …!
அக்ஷராவும் சிபியும் கமல் சார் முன்பு வாக்குவாதப்படுவது போன்ற வீடியோ ஒன்று இன்றைய முதல் ப்ரோமோவில் வெளியாகி உள்ளது.
வார இறுதி நாட்களான சனி மற்றும் ஞாயிறு ஆகிய இரண்டு நாட்களிலும் கமல் சார் போட்டியாளர்களை சந்தித்து பேசுவது வழக்கம். அதுபோல இரவு நிகழ்விலும் கமல் சார் போட்டியாளர்களுடன் பேசுகிறார். அப்பொழுது கடந்த வாரத்தில் நடத்தப்பட்ட நீயும் பொம்மை, நானும் பொம்மை டாஸ்க் குறித்து பேசப்படுகிறது.
அதில் அபினை மற்றும் நிரூப் தங்களுக்குள் உள்ள கருத்து வேறுபாடுகளை கூறுகின்றனர். அடுத்ததாக அக்ஷராவும் சிபியும் ஒருவருக்கொருவர் மாற்றி மாற்றி பேசிக்கொள்கின்றனர். இதற்கிடையில் கமல் சார் எக்ஸ்க்யூஸ் மீ என கூறி தன்னையும் பேச விடுங்கள் என்பது போல கூறுகிறார். இதோ அந்த ப்ரோமோ வீடியோ,
View this post on Instagram