“குற்றவாளிகள் விரைவில் சட்டத்தின் முன் நிறுத்தப்படுவர்” – மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்!

Default Image

அசாம் ரைபிள்ஸ் படைப்பிரிவினரைத் தாக்கியவர்கள் விரைவில் சட்டத்தின் முன் நிறுத்தப்படுவர் என்று மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கண்டனம் தெரிவித்துள்ளார்.

மணிப்பூர் மாநிலம் சுராசந்த்பூரில் ராணுவ அதிகாரி தனது குடும்பத்தினருடன் சென்று கொண்டிருந்தபோது கண்ணிவெடி மூலம் வாகனத்தை குறிவைத்து பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் அதிகாரி உட்பட 7 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலில் அசாம் ரைபிள்ஸ் படைப்பிரிவு அதிகாரி, மனைவி, மகன், ட்ரைவர் மற்றும் மூன்று துணை ராணுவப் படை வீரர்கள் உயிரிழந்துள்ளனர்.

கர்னல் விப்லவ் திரிபாதியின் மனைவியும் மகனும் கான்வாய் வாகனத்தில் இருந்தனர்.மாவட்டத்தில் ஒரு குடிமை நடவடிக்கை திட்டத்தை மேற்பார்வையிட சென்றபோது காலை 10 மணியளவில் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில்,இதற்கு கண்டனம் தெரிவித்த மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்,குற்றவாளிகள் தண்டிக்கப்படுவார்கள் என்று தெரிவித்துள்ளார்.

மேலும்,இது தொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியதாவது:

“மணிப்பூரின் சுராசந்த்பூரில் அசாம் ரைபிள்ஸ் கான்வாய் மீது நடந்த கோழைத்தனமான தாக்குதல் மிகவும் வேதனையானது மற்றும் கண்டிக்கத்தக்கது. இரண்டு குடும்ப உறுப்பினர்கள் மற்றும் CO 46 AR  உட்பட 5 துணிச்சலான வீரர்களை நாடு இழந்துள்ளது.

உயிரிழந்த குடும்பங்களுக்கு எனது அனுதாபங்கள்.குற்றவாளிகள் விரைவில் சட்டத்தின் முன் நிறுத்தப்படுவார்கள்”,என்று தெரிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்