மீண்டும் பள்ளி செல்ல மாணவர்களுக்கு ஆர்வம் குறைவு – உயர்நீதிமன்றம்
மாணவர்களின் கல்வி சம்பந்தமாக வேறு பிரச்சனைகள் என்னென்ன உள்ளன என்பதை அரசு கூற உயர்நீதிமன்றம் உத்தரவு.
தமிழகத்தில் 18 மாதங்களுக்கு பின் மீண்டும் பள்ளி செல்ல மாணவர்கள் மத்தியில் ஆர்வம் குறைவாக உள்ளது என்று சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு கருத்து தெரிவித்துள்ளது. அரசு பள்ளிகளில் மாற்று சான்று பெறுவதில் சிக்கல் உள்ளது என்று தெரிவித்து, மாணவர்களின் கல்வி சம்பந்தமாக வேறு பிரச்சனைகள் என்னென்ன உள்ளன என்பதை அரசு கூற உத்தரவிட்டுள்ளது.
மாணவர்கள் படிப்பை பாதியில் நிறுத்தவில்லை என்பதை உறுதி செய்ய குழுக்களை நியமிக்க கோரி வழக்கு தொடுக்கப்பட்டது. அரசு பள்ளி மாணவர்கள் ஆன்லைன் கல்வி பெற வசதி ஏற்படுத்தி தரக்கோரிய வழக்கு நவம்பர் 24ம் தேதிக்கு உயர் நீதிமன்றம் ஒத்திவைத்தது என்பது குறிப்பிடத்தக்கது.