“ஆட்சிக்கு வந்த 6 மாத காலத்திலேயே திமுக மீது மக்களுக்கு வெறுப்பு;சென்னைக்கு மாஸ்டர் பிளான்” – பாஜக மாநில தலைவர் அண்ணாமலை!

Default Image

சென்னை வெள்ளத்தை திமுக அரசு கையாண்ட விதம் தவறானது என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை குற்றம் சாட்டியுள்ளார்.

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியதில் இருந்து கடந்த ஒரு வாரமாக பல்வேறு பகுதிகளில் மழையானது மிகவும் தீவிரம் காட்டி வந்தது. இதனால் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்ளிட்ட வட மாவட்டங்கள் மற்றும் டெல்டா மாவட்டங்கள் என தமிழகத்தின் பல மாவட்டங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.இதன் காரணமாக பொதுமக்கள் பலரும் பெரும் பாதிப்புக்கு ஆளாகினர்.

இதனையடுத்து,உடனடியாக மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளை மேற்கொள்ள முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.மேலும், பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு நேரில் சென்று முதல்வர் ஆய்வு செய்து வருகிறார்.

இந்நிலையில்,ஆட்சிக்கு வந்த 6 மாத காலத்திலேயே திமுக அரசு மீது மக்களுக்கு வெறுப்பு ஏற்பட்டுள்ளதாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

சென்னை வள்ளுவர்கோட்டம் பகுதியில் அமைந்துள்ள பத்திரிக்கரை பகுதிக்கு சென்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை நிவாரண உதவிகளை வழங்கினார்.இதனையடுத்து,செய்தியாளர் சந்திப்பில் பேசிய அவர் கூறியதாவது:

“ஆட்சிக்கு வந்த 6 மாத காலத்திலேயே திமுக அரசு மீது மக்களுக்கு வெறுப்பு வர ஆரம்பித்து விட்டது.நாங்களும் 6 மாதத்திற்குள் ஒரு அரசை குறை சொல்லக் கூடாது என்று காத்திருந்தோம்.ஆனால்,சென்னை வெள்ளத்தை திக கையாண்ட விதம் முற்றிலும் தவறானது.இன்னும் சிறப்பாக பணிகளை செய்திருக்கணும்.

பாஜகவும் ஒரு குழு அமைத்து,சென்னைக்கு ஒரு மாஸ்டர் பிளான் தயார் செய்வதற்கு தயாராகிவிட்டோம்.அதன்படி IIT உள்ளிட்ட நிபுணர்களுடன் இந்த குழு ஆலோசனை மேற்கொண்டு மாஸ்டர் பிளான் தயாரித்து அரசுக்கு நிர்பந்தம் கொடுத்து செயல்முறை படுத்துவதற்கு பாஜக ஆக்கப்பூர்வமாக செயல்படும்.ஏனெனில்,அடுத்த வருடம் இதே நிலை நீடித்தால் மக்களுக்கு சிரமம் ஏற்படும்”,என்று தெரிவித்தார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்