சிவசங்கர் பாபாவின் ரகசிய அறையை திறக்க சிபிசிஐடி முடிவு!

சிவசங்கர் பாபா மீது மேலும் ஒரு போக்சோ வழக்குப்பதிவு செய்து சிபிசிஐடி போலீசார் நடவடிக்கை.
பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளித்த விவகாரத்தில் கைதான சிவசங்கர் பாபா மீது மேலும் ஒரு போக்சோ வழக்குப்பதிவு செய்து சிபிசிஐடி நடவடிக்கை எடுத்துள்ளது. ஏற்கனவே 4 போக்சோ வழக்குகள் பதியப்பட்டுள்ள நிலையில் மேலும் ஒரு வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில், கைரேகை பதிவை வைத்து சிவசங்கர் பாபாவின் ரகசிய அறையை திறந்து சோதனையிட சிபிசிஐடி முடிவு செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது.