மழை பாதிப்பு குறித்து வதந்தி பரப்பினால் கடுமையான நடவடிக்கை – டிஜிபி எச்சரிக்கை
மழைப் பாதிப்பு குறித்து சமூக வலைத்தளங்களில் வதந்தியான செய்திகள் பரப்பினால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வந்த நிலையில், பல மாவட்டங்களில் சாலைகளில் மழைநீர் தேங்கிய நிலையில், சாலைகள் வெள்ளக்காடாக காட்சியளித்தது. மேலும், வீடுகளுக்குள் மழைநீர் புகுந்ததால், மக்களின் இயல்புவாழ்க்கை பெரும் பாதிப்புக்கு உள்ளானது.
இந்நிலையில், மழைப் பாதிப்பு குறித்து சமூக வலைத்தளங்களில் வதந்தியான செய்திகள் பரவி வந்த நிலையில், சென்னை மாநகராட்சி சார்பில் நேற்று, வதந்தியாக வீடியோக்களை நம்ப வேண்டாம் என தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில், டிஜிபி சைலேந்திரபாபு அவர்கள், மழை பாதிப்பு குறித்து சமூகவலைத்தளங்களில் வதந்தி பரப்பினால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுத்துள்ளார்.