“பகுதிநேர ஆசிரியர்கள் பணி நிரந்தரம் செய்யப்படுவர்” -அமைச்சர் அன்பில் மகேஷ் !
தமிழகத்தில் உள்ள பகுதிநேர ஆசிரியர்கள் பணி நிரந்தரம் செய்யப்படுவர் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார்.
தற்போது தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் வடகிழக்கு பருவமழை பெய்து வருகிறது. இதனால்,மழை பாதிப்பு அதிகம் உள்ள பகுதிகளில் பள்ளிகள் தொடர்ச்சியாக விடுமுறை விடப்பட்டு வருகின்றன.
இந்நிலையில்,பொதுத்தேர்வை மாணவர்கள் பயமின்றி எழுத நடவடிக்கை எடுக்கப்படுவதாகவும்,பகுதிநேர ஆசிரியர்கள் பணி நிரந்தரம் செய்யப்படுவர் என்றும் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக இன்று செய்தியாளர் சந்திப்பில் பேசிய அமைச்சர்:
“பொதுத்தேர்வை மாணவர்கள் பயமின்றி எழுத நடவடிக்கை எடுக்கப்படும்.அந்த வகையில்,மாணவர்களின் பயத்தைப் போக்க அரையாண்டு,முழு ஆண்டுத் தேர்வுக்கு பதிலாக ஜனவரி,மார்ச் மாதங்களில் மாதிரித் தேர்வு நடத்தப்படும்.
பகுதி நேர ஆசிரியர்கள் படிப்படியாக பணி நிரந்தரம் செய்யப்படுவார்கள், அதற்கான நடவடிக்கையை முதல்வர் எடுப்பார்”,என்று தெரிவித்துள்ளார்.