உத்தர பிரதேச மாநிலத்தில் பெண்களுக்கு பாதுகாப்பற்ற நிலை உள்ளது – பிரியங்கா காந்தி!
உத்தர பிரதேச மாநிலத்தில் பெண்களுக்கு பாதுகாப்பற்ற நிலை உள்ளது என காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி தெரிவித்துள்ளார்.
உத்திரப்பிரதேச மாநிலத்தில் உள்ள லக்னோ பாபு பவனில் உள்ள அதிகாரி ஒருவரிடம் வேலை பார்த்த பெண்ணை, பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறி அவர் கைது செய்யப்பட்ட நிலையில் இது தொடர்பான செய்திகள் அதிக அளவில் பேசப்பட்டு வந்தது. இந்நிலையில் காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி தற்போது இது குறித்து பேசியுள்ளார்.
இது தொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள ஒரு பதிவில், உத்திரப்பிரதேச மாநிலத்தில் சாலையாக இருந்தாலும், அலுவலகமாக இருந்தாலும் எந்த இடத்திலுமே பெண்களுக்கு பாதுகாப்பற்ற நிலை உள்ளது என தெரிவித்துள்ளார்.
மேலும் மாநிலத்தில் உள்ள பெண்கள் அனைவரும் ஒன்றுபட்டு தங்களுக்காக போராட வேண்டும் எனவும் அவர் கூறியுள்ளார். மேலும் நீ ஒரு பெண் என்றால் சண்டை போடலாம், நாட்டு பெண்கள் எல்லாம் உன்னுடன் நிற்கிறார்கள் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.