கட்அவுட் மற்றும் பேனர் வைப்பவர்களுக்கு ஆப்பு வைத்த உயர்நீதிமன்றம்!
கட்அவுட் மற்றும் பேனர்களை வைப்பதில் கைதேர்ந்தவர்கள் தான் தமிழக மக்கள் .இந்திய முழுவதும் இந்த கலாச்சாரம் இருந்தாலும் தமிழகம் அதற்கு முன்னோடி .இதற்காகவே சென்னையை சேர்ந்த திருலோசன குமாரி என்பவர் தொடர்ந்த வழக்கில் சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது .
உயிரோடு இருப்பவர்களுக்கு கட்அவுட் மற்றும் பேனர்களை வைப்பதற்கு தடை விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இது குறித்து அனைத்து மாநகராட்சி மற்றும் மாவட்ட நிர்வாகங்களுக்கு தலைமைச் செயலாளர் அறிவுறுத்தி சுற்றறிக்கை அனுப்ப வேண்டும் என்றும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இந்த அறிவுறுத்தல்களுடன் இந்த வழக்கு முடித்து வைக்கப்படுகிறது. இருந்தபோதிலும், தூய்மையை கடைபிடித்து தமிழகம் முழுவதும் நல்ல சுற்றுச்சூழலை உருவாக்க வேண்டும் என்பதற்காக இந்த நீதிமன்றம் சில உத்தரவுகளைப் பிறப்பிக்கிறது. குடியிருப்பு பகுதிகள், வீடுகள், கட்டிடங்களில் தேவையில்லாமல் சுவர்களில் அரசியல் கட்சிகள் விளம்பரங்களை எழுதக்கூடாது. என உயர் நீதி மன்றம் திறப்பு வழங்கியுள்ளது.