கொடுக்கப்பட்டுள்ள ஹெல்ப்லைனை தொடர்பு கொள்ளவும் – தெற்கு ரயில்வே கோரிக்கை!
தனித்தனியாக அழைக்க கொடுக்கப்பட்டுள்ள ஹெல்ப்லைனை தொடர்பு கொள்ளவும் என தெற்கு ரயில்வே கோரிக்கை விடுத்துள்ளது.
தலைநகர் சென்னையில் தொடர்ச்சியாக கனமழை பெய்து வரும் நிலையில், பல்வேறு பகுதிகளிலும் வெள்ளநீர் தேங்கி காணப்படுகிறது. இதனால் சென்னை முதல் திருவள்ளூருக்கு இடைப்பட்ட புறநகர் மின்சார ரயில் சேவை பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், எந்தெந்த பகுதிகளுக்கு ரயில்கள் செல்லும், ரயில் போக்குவரத்திற்கான நேரம் குறித்த தகவல்களை அறிந்து கொள்வதற்கு வசதியாக தெற்கு ரயில்வே நிர்வாகம் நேற்று அவசர உதவிக்கான ஹெல்ப்லைன் எண்கள் அறிவித்திருந்தது.
தற்போது இது தொடர்பாக தெற்கு ரயில்வே பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், ஒவ்வொரு தனிப்பட்ட கேள்விகளுக்கும் பதில் அளிப்பது எங்களுக்கு சாத்தியமில்லை என்பதால், கொடுக்கப்பட்டுள்ள ஹெல்ப்லைன் எண்களை பயன்படுத்துங்கள். ரயில் சேவைகளின் துல்லியமான நிலைகளை பெற்றுக்கொள்ளுங்கள். பல கேள்விகள் எழுகிறது. எனவே உங்கள் அன்பான ஒத்துழைப்பு எங்களுக்கு தாருங்கள். மீண்டும் சொல்கிறோம். உங்களுக்காக வழங்கப்பட்டுள்ள ஹெல்ப்லைன் எண்களை பயன்படுத்தி தகவல்களை அறிந்து கொள்ளுங்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதோ அந்த பதிவு,
Please make use of the helplines in the attached tweet to get a more precise position of our train services as it would not be possible to each individual query. We are inundated with queries and request your kind cooperation. We repeat, please use the helplines provided for you! https://t.co/WLp7kGYMuB
— DRM Chennai (@DrmChennai) November 11, 2021