#BREAKING : இன்று மாலை கடலூர் செல்கிறார் முதல்வர் மு.க.ஸ்டாலின்..!

Default Image

முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள், மழையால் பாதிக்கப்பட்டிருக்கும் டெல்டா மாவட்டங்களை ஆய்வு செய்வதற்கு இன்று மாலை கடலூர் செல்கிறார். 

கடலூர் : தமிழகம் முழுவதும்  கடந்த சில நாட்களாக, பல மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. இதன்காரணமாக சாலைகள் வெள்ளக்காடாக காட்சியளிக்கும் நிலையில், வாகன ஓட்டிகள் மிகவும் அவதிக்குள்ளாகியுள்ளனர். மேலும் வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்ததால், மக்களின் இயல்பு வாழ்க்கை பெரும் பாதிப்புக்குள்ளாகி உள்ளது.

இந்நிலையில், சென்னையில் கடந்த சில நாட்களாக வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு சென்று முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் ஆய்வு மேற்கொண்டு, மக்களுக்கு தேவையான நிவாரண பணிகளை வழங்கினார். இதனையடுத்து, மழையால் பாதிக்கப்பட்டிருக்கும் டெல்டா மாவட்டங்களை ஆய்வு செய்வதற்கு இன்று மாலை கடலூர் செல்கிறார். மேலும், இரண்டு நாட்கள் டெல்டா மாவட்டங்களில் தங்கியிருந்து ஆய்வுகளை செய்கிறார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்