#Breaking:காற்றழுத்த தாழ்வு பகுதி:நாளை கரையை கடக்கும் – எங்கு தெரியுமா?

சென்னை:காற்றழுத்த தாழ்வு மண்டலம் நாளை மாலை கடலூர் அருகே கரையைக் கடக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.
தென் கிழக்கு வங்கக்கடலில் நேற்று உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி தற்போது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக மாறியுள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது.
இந்நிலையில்,ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி அடுத்த 12 மணி நேரத்தில் தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று நாளை மாலை காரைக்கால் ஹரிகோட்டா இடையே கடலூர் அருகே கரையைக் கடக்கும் என்று வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.
இதனால்,தெற்கு ஆந்திராவிலிருந்து,நாகப்பட்டினம் வரை உள்ளிட்ட கடலோர பகுதிகளில் மிக அதிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக,இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி புயலாக மாற வாய்ப்பில்லை எனவும் காற்றழுத்த தாழ்வு மண்டலமாகவே கரையைக் கடக்கும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
விஜய் தலைமையில் இன்று த.வெ.க. மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்.!
April 11, 2025
குட் பேட் அக்லி முதல் நாளில் எவ்வளவு வசூல் செய்யும்?
April 10, 2025