#Breaking:நவ.13 புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி – வானிலை ஆய்வு மையம்!
நவம்பர் 13 ஆம் தேதி புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவான பிறகு மேற்கு-வடமேற்கு திசையை நோக்கி நகரும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தென்கிழக்கு வங்கக்கடலில் நேற்று உருவாகிய குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி தற்போது வலுவடைந்து ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக மாறியுள்ளது.
இந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி அடுத்த 12 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும் எனவும்,அதன்பிறகு இது வடமேற்கு நோக்கி நகர்ந்து கரையை கடக்கும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது.
இந்நிலையில்,வங்க கடலில் தெற்கு அந்தமானை ஒட்டியுள்ள பகுதியில் வரும் நவம்பர் 13 ஆம் தேதி புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவான பிறகு மேற்கு-வடமேற்கு திசையை நோக்கி நகரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.எனினும்,மழை பாதிப்புகள் குறித்து அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகவில்லை. ஏனெனில்,நேற்று உருவான காற்றழுத்த தாழ்வுப்பகுதி முழுமையாக கடந்து சென்ற பின்னரே நவம்பர் 13 ஆம் தேதி உருவாகவுள்ள புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதியினால் ஏற்படும் மழை குறித்த தகவல் தெரிய வரும் என்று கூறப்பட்டுள்ளது.