#Breaking:புதுக்கோட்டையில் பள்ளிகள்,கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு!
புதுக்கோட்டையில் பள்ளிகள்,கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
வடகிழக்கு பருவமழை தொடங்கிய நிலையில்,தமிழகத்தில் கடந்த சில தினங்களாக கனமழை பெய்து வருகிறது.மேலும்,வங்க கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியிருப்பதால், டெல்டா மற்றும் கடலோர மாவட்டங்களில் நவம்பர் 10 ஆம் தேதி கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
இந்நிலையில்,தொடர் மழை காரணமாக தொடர் மழை காரணமாக புதுக்கோட்டையில் பள்ளி,கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அளிப்பதாக அம்மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு அறிவித்துள்ளார்.
கனமழை முன்னெச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள மாவட்டங்களில் புதுக்கோட்டையும் உள்ளதால் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.