மத்திய பிரதேச அரசு மருத்துவமனையில் தீ விபத்து – 4 பச்சிளம் குழந்தைகள் பலி!

மத்திய பிரதேச அரசு மருத்துவமனையில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி 4 பச்சிளம் குழந்தைகள் உயிரிழந்துள்ளனர்.
மத்திய பிரதேச மாநிலம் போபாலில் உள்ள கமலா நேரு குழந்தைகள் மருத்துவமனையில் உள்ள புதிதாகப் பிறந்த குழந்தைகளுக்கான பராமரிப்புப் பிரிவில் நேற்று இரவு பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த தீ விபத்தில் மருத்துவமனையில் புதிதாக பிறந்த பச்சிளம் குழந்தைகள் 4 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.
இந்நிலையில் இது தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டு வரும் நிலையில், இது குறித்து கூறியுள்ள மருத்துவக் கல்வி அமைச்சர் விஸ்வாஸ் சாரங் அவர்கள் ஷார்ட் சர்க்யூட் காரணமாக தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என தெரிவித்துள்ளார். மேலும் மருத்துவமனையில் தீ பரவிய வார்டில் அதிகளவு தீ பரவியுள்ளதகவும் தெரிவித்துள்ளார்.
லேட்டஸ்ட் செய்திகள்
விஜய் தலைமையில் இன்று த.வெ.க. மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்.!
April 11, 2025
குட் பேட் அக்லி முதல் நாளில் எவ்வளவு வசூல் செய்யும்?
April 10, 2025