அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ்-ஐ சந்தித்த அண்ணாமலை…!
அதிமுக ஒருங்கிணைப்பாளர் திரு. ஓ. பன்னீர்செல்வம் அவர்களை இன்று தேனி மாவட்டம், பெரியகுளத்தில், பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை சந்திப்பு.
தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை அவர்கள் தலைமையில், பாஜக சார்பில், முல்லை பெரியாறு அணை விவகாரத்தில், தமிழக அரசை கண்டித்து தேனி ஆட்சியர் அலுவகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தப்பட்டது.
இந்நிலையில், அதிமுக ஒருங்கிணைப்பாளர் திரு. ஓ. பன்னீர்செல்வம் அவர்களை இன்று தேனி மாவட்டம், பெரியகுளத்தில், பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை அவர்கள் மரியாதை நிமித்தமாக நேரில் சந்தித்து பேசி உள்ளார்.
மாண்புமிகு கழக ஒருங்கிணைப்பாளர் திரு. ஓ. பன்னீர்செல்வம் அவர்களை இன்று தேனி மாவட்டம், பெரியகுளத்தில், பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் திரு. K. அண்ணாமலை அவர்கள் மரியாதை நிமித்தமாக நேரில் சந்தித்து பேசினார். pic.twitter.com/4fR8rg7MRz
— AIADMK (@AIADMKOfficial) November 8, 2021