#T20WorldCup:ஆஸ்திரேலியாவின் மிட்செல் மார்ஷை கட்டிப்பிடித்த கிறிஸ் கெய்ல் – வைரல் வீடியோ!

Default Image

மேற்கிந்திய தீவுகள் மற்றும் ஆஸ்திரேலியா டி20 உலகக் கோப்பை போட்டியின் போது,மேற்கிந்திய தீவுகள் வீரர் கிறிஸ் கெய்ல் ஓடி வந்து ஆஸ்திரேலிய வீரரை கட்டிப்பிடித்த இனிமையான வீடியோ வைரலாகி வருகிறது.

அபுதாபியில் உள்ள ஷேக் சயீத் மைதானத்தில் ஆஸ்திரேலியா மற்றும் மேற்கிந்தியத் தீவுகள் கிடையான நேற்றைய டி20 உலகக் கோப்பை போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. இதனைத் தொடர்ந்து களமிறங்கிய மேற்கிந்திய தீவுகள் அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்களை இழந்து 157 ரன்களை எடுத்தது.இதனைத் தொடர்ந்து ஆஸ்திரேலிய அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் 16.2 ஓவரில் 161 ரன்களை எடுத்து வெற்றி பெற்று,அரையிறுதிக்கு முன்னேறியது.

இதற்கிடையில்,கெய்ல் தான் வீசிய ஒரே ஓவரில் மிட்செல் மார்ஷை அவுட்டாக்கினார்.மேலும்,அவுட் ஆகி பெவிலியனுக்குத் திரும்பிச் சென்ற ஆஸ்திரேலிய வீரர் மார்ஷை பின்னால் சென்று கெயில் கட்டிப்பிடித்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

கெயில் இன்னும் பகிரங்க அறிவிப்பை வெளியிடாத நிலையில், டுவைன் பிராவோ சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதை உறுதி செய்துள்ளார். போட்டி முடிந்ததும் கெய்ல் மற்றும் பிராவோ இருவருக்கும் ஆஸ்திரேலிய அணி மரியாதை செலுத்தியது.ஆனால்,கெய்ல் தரப்பில் இருந்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் இல்லை என்றாலும், கெய்லின் இறுதி சர்வதேச ஆட்டம் இதுவாக இருக்கலாம் என்று தெரிகிறது. கெய்ல் சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து விலக முடிவெடுத்தால், மார்ஷின் வெளியேற்றம்,மேற்கிந்திய தீவுகளுக்கு அவர் வீசிய கடைசி பந்து வீச்சாக இருக்கும்.

இடது கை பேட்ஸ்மேனான கெய்ல், 1999 ஆம் ஆண்டு ஒருநாள் சர்வதேசப் போட்டியில் அறிமுகமானதில் இருந்து ஒயிட்-பால் கிரிக்கெட்டில் 27 சதங்கள் உட்பட 12,000 ரன்களுக்கு மேல் குவித்துள்ளார்.அவர் 103 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 7,214 ரன்களை 42 க்கு மேல் சராசரியாகவும், அதிகபட்சமாக 333 ரன்களும் எடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்