சென்னையில் பரபரப்பு : அரை நிர்வாணமாக சாலை மறியலில் ஈடுபட்ட பெண்!
சென்னை மெரீனா கடற்கரையில் அரை நிர்வாணமாக பெண் ஒருவர் சாலை மறியலில் ஈடுபட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னையின் மிக முக்கிய பகுதிகளில் ஒன்றான மெரினா கடற்கரையில் ஆயிரக்கணக்கான மக்கள் நாள்தோறும் வந்து செல்வது வழக்கம். இந்த பகுதியில் நேற்றிரவு பெண்ணொருவர் அரை நிர்வாணமாக சாலை மறியலில் ஈடுபட்டு உள்ளார். மேலும் அந்தப் பெண் குடிபோதையில் தனது கணவருடன் இணைந்து சாலை மறியல் செய்துள்ளார். அங்கும் இங்குமாக நடந்து கொண்டு பிரச்சனை செய்து வந்த பெண் குறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்துள்ளனர்.
அதன் பின்பு அவரை தடுத்து நிறுத்தி விசாரணை செய்ததில் அவர் போலீஸாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். பின் தனது கணவரை சிலர் தாக்கி விட்டதாகவும், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், இதனால் தான் சாலை மறியலில் ஈடுபட்டதாகவும் அந்த பெண் தெரிவித்துள்ளார். பண்டிகை சமயத்தில் பொது மக்கள் கூட்டம் அதிகமுள்ள பகுதியில் பெண்ணொருவர் அரை நிர்வாணமாக போராட்டம் நடத்தியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.