வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை:முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை!

Default Image

வடகிழக்கு பருவமழை தொடர்பாக முதல்வர் ஸ்டாலின் தலைமையில்,சென்னை தலைமை செயலகத்தில் காணொலி காட்சி வாயிலாக ஆலோசனைக் கூட்டம் தொடங்கியுள்ளது.

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்து இருக்கிறது,வங்க கடலில் நவம்பர் 9 ஆம் தேதி புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதியும் உருவாகவுள்ளது.இதனால்,வட கடலோர மாவட்டங்களில் அதிக கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையத்தால் கணிக்கப்பட்டிருக்கிறது.

இந்த நிலையில்,வடகிழக்கு பருவ மழை தமிழகத்தில் தீவிரமடையத் தொடங்கி இருப்பது தொடர்பாக சென்னை தலைமைச்செயலகத்தில் முதல்வர் ஸ்டாலின் தலைமையில்,தற்போது ஆலோசனைக் கூட்டம் தொடங்கியுள்ளது.

இந்த கூட்டத்தில்,வடகிழக்கு பருவ மழையின்போது எடுக்கப்பட வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடர்பாக முதல்வர் அவர்கள் ஆலோசனை மேற்கொள்ளவுள்ளார்.காணொலி காட்சி வாயிலாக நடைபெறும் இக்கூட்டத்தில்,,கடலோரப் பகுதிகளை சேர்ந்த 13 மாவட்ட ஆட்சியர்கள்,வருவாய்,மருத்துவம் ,வேளாண்,மின்சாரம்,மீன்வளம் உள்ளிட்ட துறைகளின் அமைச்சர்கள்,காவல்துறையின் உயர்அலுவலர்கள் மற்றும் பல்வேறு துறைகளின் செயலர்களும் கலந்து கொண்டுள்ளனர்.

இக்கூட்டத்தில் ஒரு சில அதிகாரிகள்,அமைச்சர்கள் நேரடியாக கலந்து கொண்டுள்ளனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்