நீட் தேர்வில் தேர்ச்சி பெற்ற பழங்குடி மாணவி…! நேரில் சந்தித்து பாராட்டி பரிசு வழங்கிய அமைச்சர் கயல்விழி செல்வராஜ்…!

Default Image

மாணவி சங்கவியை நேரில் சந்தித்த ஆதி திராவிடர் நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் பாராட்டு தெரிவித்ததுடன் பரிசாக மடிக்கணினியை வழங்கினார். 

இந்தியா முழுவதும் செப்.12-ஆம் தேதி மருத்துவ படிப்புக்கான நீட் தேர்வு நடைபெற்றது. இந்நிலையில் இந்த தேர்வினை தமிழகத்தில் 1.10 லட்சம் மாணவர்கள் எழுதியுள்ளனர். இந்த நீட் தேர்வுக்கான முடிவுகள்  கடந்த சில தினங்களுக்கு முன்பதாக வெளியாகியுள்ளது.

இந்த நீட் தேர்வில், கோவையில் முதல் தலைமுறையாக மலசர் பழங்குடி மாணவி  தேர்ச்சி பெற்றுள்ளார். அந்த மாணவியின் பெயர் சங்கவி (வயது 20). மதுக்கரை அருகே உள்ள எம்.நஞ்சப்பனூர் என்ற மலைக்கிராமத்தைச் சேர்ந்தவர். இவரது தந்தை முனியப்பன் இறந்து விட்டார். தாயார் வசந்தாமணி கண் பார்வை குறைபாடுள்ளவர்.

நீட் தேர்வில் வெற்றி பெற்ற மாணவி சங்கவி, தன்னுடைய சாதி சான்றிதழ் வாங்க கடுமையாக போராடி வெற்றி பெற்ற நிலையில், நீட் தேர்வில் தேர்ச்சி பெறவும் கடுமையாக பேராடி வெற்றி கண்டுள்ளார். இதுகுறித்து மாணவி கூறுகையில், ‘என்னுடைய வெற்றி என் கிராமத்தின் வெற்றியென மாணவி பெருமிதம்’ என தெரிவித்துள்ளார்.

மாணவி சங்கவி, நீட் தேர்வில் இவர் 720 மதிப்பெண்களுக்கு 202 மதிப்பெண்கள் பெற்றுள்ளார். பழங்குடியின மாணவியான இவர் 108 மதிப்பெண்கள் பெற்றிருந்தாலே அரசு மருத்துவக்கல்லூரியில் எம்.பி.பி.எஸ். படிப்புக்கு தகுதி பெற்று விடுவார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், நீட் தேர்வில் 202 மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சியடைந்த மாணவி சங்கவியை நேரில் சந்தித்த ஆதி திராவிடர் நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் பாராட்டு தெரிவித்ததுடன் பரிசாக மடிக்கணினியை வழங்கினார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்