கோயில் நகைகளை உருக்குவதை எதிர்த்து வழக்கு..!
கோயில் நகைகளை உருக்குவதை எதிர்த்து தூத்துக்குடியை சேர்ந்த பாலமுருகன் என்பவர் சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்துள்ளார்.
தமிழகம் முழுவதும் உள்ள கோயில்களில் உள்ள நகைகளை உருக்கி தங்கக் கட்டிகளாக மாற்றி தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளில் “டெபாசிட்” செய்ய இந்து சமய அறநிலையத் துறை முடிவு செய்துள்ளது. இந்நிலையில், கோயில் நகைகளை உருக்கி தங்க கட்டிகளாக மாற்றும் தமிழ்நாடு அரசின் அறிவிப்புக்கு தடை விதிக்க கோரி வழக்கு தொடரப்பட்டுள்ளது. தூத்துக்குடியை சேர்ந்த பாலமுருகன் என்பவர் சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்துள்ளார்.
சென்னை உயர்நீதிமன்ற முதன்மை அமர்வில் விசாரணைக்கு பட்டியலிட உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது. கோயில் நகை விவகாரம் குறித்த வழக்கு சென்னை உயர்நீதிமன்ற முதன்மை அமர்வு நிலுவையில் உள்ளதாக அரசு தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அரசு தரப்பு தகவலை அடுத்து பாலமுருகன் வழக்கையும் முதன்மை அமர்வு முன்பு பட்டியலிட நீதிபதிகள் உத்தரவு பிறப்பித்தனர்.