இடைத்தேர்தல் முடிவுகள்; ஆளும் கட்சிகளே முன்னிலை…!
13 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசதத்தில் நடைபெற்ற இடைத்தேர்தலில் ஆளும் கட்சிகளே முன்னிலையில் உள்ளனர்.
13 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசமான தாத்ரா மற்றும் நாகர் ஹவேலி ஆகிய இடங்களில் மூன்று மக்களவை மற்றும் 29 சட்டமன்ற தொகுதிகளில் நடைபெற்ற இடைத்தேர்தல்களுக்கான வாக்குகளை தேர்தல் அதிகாரிகள் இன்று எண்ணத் தொடங்கினர். இந்த இடங்களுக்கு அக்டோபர் 30-ம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது.
அஸ்ஸாமில் 5, மேற்கு வங்கத்தில் 4, மத்தியப் பிரதேசம், இமாச்சலப் பிரதேசம், மேகாலயாவில் தலா 3, பீகார், கர்நாடகா, ராஜஸ்தானில் தலா 2, ஆந்திரா, ஹரியானா, மகாராஷ்டிரா, மிசோரம் மற்றும் தெலுங்கானா ஆகிய மாநிலங்களில் தலா ஒரு இடத்துக்கு சட்டப்பேரவை இடைத்தேர்தல் நடைபெற்றது.
இந்த 29 சட்டமன்றத் தொகுதிகளில் பெரும்பாலான தொகுதிகளில் பாஜக வெற்றி பெற்றது. காங்கிரஸ் 9 இடங்களில் வெற்றி பெற்ற நிலையில், மீதமுள்ள தொகுதிகளை பிராந்திய கட்சிகள் கைப்பற்றின.
தாத்ரா மற்றும் நாகர் ஹவேலி, ஹிமாச்சலப் பிரதேசத்தில் உள்ள மண்டி மற்றும் மத்தியப் பிரதேசத்தில் உள்ள கந்த்வா ஆகிய லோக்சபா இடைத்தேர்தல்கள், அவையில் உள்ள உறுப்பினர்கள் இறந்ததால் இடைத்தேர்தல் நடைபெற்றது. மேற்கு வங்கத்தில் உள்ள 4 தொகுதிகளிலும் ஆளும் திரினாமுல் காங்கிரஸ் முன்னிலை; அசாமில் உள்ள 5 தொகுதிகளிலும் ஆளும் பாஜக கூட்டணி முன்னிலை
பீகாரில் உள்ள 2 தொகுதிகளில் ஜனதா தளம் மற்றும் ஆர்.ஜே.டி தலா ஒரு இடங்களில் முன்னிலை, இமாச்சலில் 3 தொகுதிகளில் இரண்டில் காங்கிரசும், ஒரு தொகுதியில் ஆளும் பாஜகவும் முன்னிலையில் உள்ளது. மத்திய பிரதேசத்தில் உள்ள மூன்று தொகுதிகளும் பாஜக முன்னிலையில் உள்ளது.
கர்நாடகாவில் உள்ள 2 தொகுதிகளில் பாஜக மற்றும் காங்கிரஸ் தலா ஒரு இடங்களில் முன்னிலை, ராஜஸ்தானில் உள்ள 2 இடங்களில் காங்கிரசும், மத்தியப்பிரதேசத்தில் உள்ள 3 தொகுதிகளிலும் பாஜக முன்னிலையில் உள்ளது.