அதிமுக பொதுச்செயலாளர் என்ற பெயரில் தீபாவளி வாழ்த்து தெரிவித்த சசிகலா…!

Default Image

அதிமுக பொதுச்செயலாளர் என்ற பெயரில் தீபாவளி வாழ்த்து தெரிவித்த சசிகலா.

தீபாவளிக்கு வாழ்த்து தெரிவித்து, அதிமுக பொதுச்செயலாளர் சசிகலா என்ற பெயரில் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த  அறிக்கையில், ‘இருள் விலகி ஒளி பிறக்கும் தினமாகவும் தீமைகள் அகன்று நன்மைகள் பிரகாசிக்கும் தினமாகவும் கொண்டாடப்படுகின்ற இந்த நன்னாளில் அனைவருக்கும் என் இதயம் கனிந்த தீபாவளி நல்வாழ்த்துக்களை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

பெரும் தொற்றான கொரோனா என்னும் கொடிய நோயை வென்று மனிதகுலம்மீண்டும் புத்துயிர் பெற்று கொண்டாடும் வகையில் இந்த தீபாவளி திருநாளில், அனைவரும் கண்டிப்பாக முகக்கவசம் அணிவதுடன், தடுப்பூசியையும் தவறாமல் செலுத்தி கொண்டு கவனமாக சந்தோசத்துடன் இந்த தீப ஒளி திருநாளை கொண்டாட வேண்டுமாய் அன்போடு கேட்டுக்கொள்கிறேன்.

நரகாசுரன எனும் கொடிய அரக்கனை மகாலட்சுமி துணையுடன் திருமால் அழித்த நினமே தீபாவளி பண்டிகையாகக் கொண்டாடப்படுகிறது. இந்தத்திருநாளில், சூழ்ச்சிகளும் தீமைகளும் நம்மை விட்டு விலக நன்மையும், அன்பும் நாடி வரஇன்பமாய் கொண்டாடுவோம் தீபாவளியை இந்த இனிய திருநாளில், நாடெங்கும் அன்பும் அமைதியும் தழைக்கட்டும்.

வேற்றுமை அகன்று ஒற்றுமை ஓங்கட்டும். அனைவரது வாழ்விலும் வளமும் நலமும் பெருகட்டும் என்று இறைவனை வேண்டி, அனைவருக்கும் மீண்டும் ஒரு முறை எனது இனிய தீபாவளி நல்வாழ்த்துகளை, உரித்தாக்கிக் கொள்கிறேன்.’ என தெரிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்