#BREAKING : தீபாவளியன்று பட்டாசு வெடிக்கும் நேரம் அறிவிப்பு…! எந்தெந்த நேரங்களில் தெரியுமா…?

தீபாவளி அன்று காலை 6-7 மணி வரையும், இரவு 7-8 மணி வரையும் பட்டாசு வெடிக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
தீபாவளி என்றாலே பட்டாசு வெடிப்பது தான் மக்களுக்கு மகிழ்ச்சி. அந்த வகையில், தீபாவளி அன்று காலை 6-7 மணி வரையும், இரவு 7-8 மணி வரையும் பட்டாசு வெடிக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. பசுமை பட்டாசுகளை வெடிக்க மட்டுமே அனுமதி அளிக்கப்படுவதாக சுற்றுசூழல் – காலநிலை மாற்றத்துறை அறிவித்துள்ளது.
ஒலி மாசு ஏற்படுத்தும் சரவெடிகள் வெடிப்பதை தவிர்க்க வேண்டும் என்றும், மருத்துவமனை , பள்ளி, நீதிமன்றம், வழிபாட்டு தலங்கள் அருகில் பட்டாசுகளை வெடிக்க வேண்டாம் என்றும், குடிசை பகுதிகள், எளிதில் தீ பிடிக்க வாய்ப்புள்ள இடங்களில் பட்டாசு வெடிப்பதை தவிர்க்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
MI vs KKR : சொந்த ஊரில் மும்பை இந்தியன்ஸின் முதல் போட்டி! கொல்கத்தாவுக்கு எதிராக ஃபீல்டிங் தேர்வு!
March 31, 2025
தூத்துக்குடி இளைஞர்களுக்கான “புத்தொழில் களம்” ரூ.10 லட்சம் நிதியுதவி! கனிமொழி எம்.பி அறிவிப்பு!
March 31, 2025