டெல்லியில் டெங்கு பரவல் அதிகமுள்ள பகுதிகளில் மத்திய குழு ஆய்வு …!
டெல்லியில் டெங்கு பரவல் அதிகமுள்ள பகுதிகளுக்கு மத்திய நிபுணர் குழுவை அனுப்ப மத்திய சுகாதார செயலாளருக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
கொரோனா தொற்று பல்வேறு பகுதிகளிலும் குறையாமல் தொடரும் நிலையில், சில பகுதிகளில் டெங்கு கொசு தாக்கம் அதிகரித்து வருகிறது. மேலும், இதனால் உயிரிழப்புகளும் அதிகளவில் ஏற்படுகிறது. குறிப்பாக, தலைநகர் டெல்லியில் டெங்கு தொற்று அதிக அளவில் காணப்படுகிறது டெல்லியில் உள்ள டெங்கு பரவல் நிலைமை ஆய்வு செய்யப்பட்டுள்ளது.
டெங்கு பாதிப்பு அதிகமாக உள்ள மாநிலங்களுக்கு நிபுணர் குழுவை அனுப்ப மத்திய சுகாதாரத் துறை செயலாளருக்கு மத்திய சுகாதார அமைச்சர் மன்சூக் மாண்டவியா அவர்கள் உத்தரவிட்டுள்ளார்கள். மேலும், தலைநகர் டெல்லியில் தான் தற்போது அதிக அளவில் டெங்கு பரவல் இருப்பதாகவும், உயிரிழப்புகளும் அங்கு தான் அதிகம் ஏற்படுவதாக தெரிவித்துள்ளார்.