GATE-2022.! விண்ணப்பத்தை திருத்திக்கொள்ள ஓர் அறிய வாய்ப்பு.!

Default Image

GATE நுழைவுத்தேர்வுக்காக பதிவேற்றம் செய்யப்பட்ட ஆன்லைன் விண்ணப்பத்தில் ஏதேனும் மாற்றங்கள் இருந்தால், அதனை திருத்திக்கொள்ள இன்று ( நவம்பர் 1) முதல் நவம்பர் 12ஆம் தேதி வரை கால அவகாசம் கொடுக்கப்பட்டுள்ளது.

ஐஐடி பல்கலைக்கழக கல்லூரியில் சேர்வதற்கான நுழைவு தேர்வான GATE (Graduate Aptitude Test in Engineering) அடுத்த வருட பிப்ரவரி மாதம் நடக்க உள்ளது. M.E , M.Tech போன்ற மேற்படிப்புகளை ஐஐடியில் சேர்ந்து படிப்பதற்கு இந்த தேர்வு நடத்தப்படுகிறது.

மெக்கானிக்கல், கம்ப்யூட்டர் சயின்ஸ், எலெக்ட்ரிக்கல், எலெக்ட்ரானிக்ஸ் போன்ற 27விதமான பிரிவுகளில் இந்த நுழைவு தேர்வு நடத்தப்படுகிறது. இதனை எழுதுவதற்கு நமது மேற்படிப்புக்கு தகுந்த இளங்கலை படிப்பு முடித்திருக்க வேண்டும்.

இந்த GATE தேர்வில் பங்கேற்க்க ஆன்லைன் அப்ளிகேஷன் கடைசி தேதி செப்டம்பர் 30ஆம் தேதி முடிந்துவிட்டது. கட்டணம் செலுத்துவதற்கான கடைசி நாளும் அக்டோபர் 7ஆம் தேதி அன்று நிறைவு பெற்றது.

தற்போது, பதிவேற்றம் செய்யப்பட்ட ஆன்லைன் விண்ணப்பத்தில் ஏதேனும் மாற்றங்கள் இருந்தால், அதனை திருத்திக்கொள்ள இன்று
( நவம்பர் 1) முதல் நவம்பர் 12ஆம் தேதி வரை கால அவகாசம் கொடுக்கப்பட்டுள்ளது. அதனை பயன்படுத்தி தேர்வெழுதும் மாணவர்கள், தங்கள் விண்ணப்பத்தில் ஏதேனும் மாற்றங்கள் இருந்தால் உரிய இணையதள பக்கத்திற்கு சென்று திருத்திக்கொள்ளலாம்.

GATE-2022 தேர்வு அடுத்த வருடம் பிப்ரவரி மாதம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதற்கான தேர்வு தேதி இன்னும் அறிவிக்கப்படவில்லை.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்