‘பசித்தவயிறுகள் அதிகரித்துள்ளன’ – பிறந்தநாளை முன்னிட்டு கமலஹாசன் ட்வீட்…!

Default Image

என் பிறந்தநாளையொட்டி ஏழைகளுக்கு 7 லட்சம் உணவுப்பொட்டலங்களை வழங்குகிறார்கள்.

மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமலஹாசன் அவர்கள் வரும் 7-ஆம் தேதி தனது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இந்நிலையில், அவரது பிறந்தநாளை சிறப்பிக்கும் வண்ணம் மக்கள் நீதி மய்யம் கட்சியை சேர்த்தவர்கள், 7 லட்சம் ஏழைகளுக்கு  உணவுப்பொட்டலங்களை வழங்குகிறார்கள்.

இதுகுறித்து கமலஹாசன் தனது ட்விட்டர் பக்கத்தில், ‘என் பிறந்தநாளையொட்டி ஏழைகளுக்கு 7 லட்சம் உணவுப்பொட்டலங்களை வழங்குகிறார்கள் மநீமவினர்.இது பிறந்தநாள் கொண்டாட்டம் மட்டுமல்ல. பட்டினிப்பட்டியலில் சிறிய நாடுகளை விடவும் பின்தங்கியிருக்கிறோம்.பசித்தவயிறுகள் அதிகரித்துள்ளன.இந்தக்கவலை நமை ஆள்வோர்க்கு இருக்கிறதாவெனும் நினைவூட்டலும் கூட.’ என பதிவிட்டுள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்