இன்றைய போட்டியில் வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் இந்தியா, நியூஸிலாந்து..!

Default Image

இன்றைய போட்டியில் இந்தியா, நியூசிலாந்து மோதுகிறது.

உலக கோப்பை டி20 போட்டி விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றது. டி20 உலககோப்பையில் நியூசிலாந்து, இந்தியா விளையாடிய ஒரு போட்டியில்  தோல்வியை தழுவியுள்ளது. இரண்டு அணிகளுமே பாகிஸ்தான் தோற்கடித்தது. இன்று நடைபெறவுள்ள போட்டியில் இந்தியா, நியூசிலாந்து மோதுகிறது. இன்று தோல்வியடையும் அணிகள் அரை இறுதி வாய்ப்பை இழக்க அதிக வாய்ப்புள்ளதால் இன்றை போட்டி மிக முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.

இன்றைய போட்டி துபாய் மைதானத்தில் நடைபெறுவதால் டாஸ் வெல்வது முக்கியமாக பார்க்கப்படுகிறது. இந்த மைதானத்தில் இரண்டாவதாக பேட்டிங் செய்த அணியே பெரும்பாலும் வெற்றி பெற்றுள்ளதால் இன்றைய போட்டியில் இந்திய அணி டாஸ் வெல்லும் பட்சத்தில் பீல்டிங் தேர்வு செய்து இரண்டாவது களமிறங்க வேண்டும்.  இப்போட்டி இரவு 07: 30 மணிக்கு தொடங்கவுள்ளது.

இன்றைய போட்டியில் ஹர்திக் பாண்டியா பவுலிங் போடுவார் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது. கடந்த  போட்டியில் 6-வது பவுலர் இல்லாததால் இந்திய அணி திணறியது. பாகிஸ்தான் இதுவரை விளையாடிய 3 போட்டிகளிலும் வெற்றி பெற்று அரையிறுதி வாய்ப்பை உறுதி செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

live tamil news
trump tariffs
manoj kumar
Rohit Sharma Zaheer Khan
tn rain update
waqf bill 2025
venkatesh iyer ipl