ஒற்றுமையாக இருந்தால்தான் முன்னேற முடியும்- பிரதமர் மோடி..!

Default Image

கடந்த 7 ஆண்டுகளில் நாட்டிற்கு தேவையில்லாத சட்டங்கள் நீக்கப்பட்டுள்ளன என்று மோடி தெரிவித்துள்ளார்.

தேசிய ஒற்றுமை தினத்தை முன்னிட்டு பிரதமர் ஆற்றிய உரையில் நாட்டிற்காக வாழ்க்கையை அர்ப்பணித்த சர்தார் வல்லபாய் படேலுக்கு நாடு அஞ்சலி செலுத்துகிறது. வரலாற்றில் மட்டும் சர்தார் படேல் வாழவில்லை. இந்தியர்களின் மனங்களில் வாழ்கிறார். நம் ஒற்றுமையை இருந்தால்தான் முன்னேற முடியும். நமது இலக்குகளை அடைய முடியும். இந்திய வலிமையாகவும், வளர்ச்சியுடனும் இருக்க சர்தார் வல்லபாய் படேல் விரும்பினார்.

நாட்டின் நலனுக்கு எப்போதும் முக்கியத்துவம் கொடுத்தார். அவர் கொடுத்த உத்வேகத்தால், நாட்டிற்கு உள்ளேயும், வெளியேயும் இருந்து வரும் சவால்களை எதிர்கொள்ளும் திறன் இந்தியாவிற்கு கிடைத்துள்ளது. கடந்த 7 ஆண்டுகளில் நாட்டிற்கு தேவையில்லாத சட்டங்கள் நீக்கப்பட்டுள்ளன. புவியியல் ரீதியாக மட்டும் இந்தியா இணைந்த பகுதி கிடையாது.

இந்தியாவின் பாரம்பரியம் மற்றும் சமூக ரீதியாக வளர்ந்த, நமது ஜனநாயகத்தின் வலுவான அடித்தளமானது, ‘ஒரே பாரதம், சிறந்த பாரதம்’ என்ற உணர்வை தருகிறது. நாட்டின் நவீன உள்கட்டமைப்பு வளர்ச்சியானது, புவியியல் மற்றும் வரலாற்றிற்கு இடையிலான இடைவெளியை குறைக்கிறது என தெரிவித்தார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்