நடிகர் புனித் ராஜ்குமார் மறைவால் ரசிகர்கள் 3 பேர் உயிரிழப்பு..!

Default Image

நடிகர் புனித் ராஜ்குமார் மறைவால் ரசிகர்கள் 3 பேர் உயிரிழந்தனர். அதில் 2 பேர் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தனர்.

கன்னட திரையுலகில் பிரபல நடிகராக இருந்து வந்த புனித் ராஜ்குமார் நேற்று மாரடைப்பு காரணமாக திடீரென்று உயிரிழந்தார். இதனால் புனித் ராஜ்குமாரின் ரசிகர்கள் பெரு அதிர்ச்சியில் உள்ளனர். புனித் ராஜ்குமார் உயிரிழந்ததை தொடர்ந்து பிரதமர் உள்ளிட்ட பல அரசியல் தலைவர்கள், பிரபலங்கள் தங்களது இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், நடிகர் புனித் ராஜ்குமார் மறைவால் ராகுல்(21) என்ற ரசிகர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். மேலும் புனித் ராஜ்குமார் மறைந்த அதிர்ச்சியில் மாரடைப்பு ஏற்பட்டு ரசிகர்கள் முனியப்பன், பரசுராம் ஆகியோர் உயிரிழந்தனர். கர்நாடகாவின் சாம்ராஜ்நகர் மாவட்டம், ஹனூர் தாலுக்கா, மருரு கிராமத்தைச் சேர்ந்த முனியப்பன்(30) மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார். இது குறித்து அந்த கிராம மக்கள் கூறுகையில், முனியப்பா நடிகர் புனித் ராஜ்குமாரின் தீவிர ரசிகராக இருந்தார். மேலும் அவரது அனைத்து படங்களையும் தவறாமல் பார்த்து வந்தார்.

நேற்று நடிகர் புனித் ராஜ்குமார் மாரடைப்பால் உயிரிழந்ததை அறிந்து முனியப்பா அதிர்ச்சியடைந்தார். அவர் தொலைக்காட்சி முன் அழுது கொண்டு இருக்கும்போது உடனே நெஞ்சுவலி என்று கூறி கீழே விழுந்தார். உடனடியாக முனியப்பா பொன்னாச்சி ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு கொண்டு செல்லப்பட்டபோது அங்கு அவர் மாரடைப்பு காரணமாக இறந்துவிட்டதாக தெரிவித்தனர். அதேபோல பெலகாவியில் உள்ள ஷிண்டோல்லி கிராமத்தில் நடிகர் புனித் ராஜ்குமார் மற்றொரு ரசிகர் மாரடைப்பால் உயிரிழந்தார். புனித் ராஜ்குமார் உயிரிழந்த செய்தியை அறிந்து தொலைக்காட்சியின் முன் கட்டுக்கடங்காமல் அழுது கொண்டிருந்தார்.

அப்போது கடுமையான மாரடைப்பு ஏற்பட்டு நேற்று இரவு 11 மணியளவில் காலமானார். மேலும், நடிகர் புனித் ராஜ்குமாரின் மற்றொரு ரசிகர் வீட்டில் தற்கொலை செய்து கொண்டர். நேற்று இரவு நடிகர் புனித் ராஜ்குமார் படத்திற்கு தனது வீட்டில் மரியாதை செலுத்திய பின்னர் ராகுல்(21) என்ற ரசிகர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்