தொடர் மழை காரணமாக தமிழகத்தில் 9 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை ….!

தொடர் மழை காரணமாக தமிழகத்தில் 9 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் கடந்த 26 ஆம் தேதி முதல் தொடங்கியுள்ள வடகிழக்கு பருவமழை காரணமாக பல்வேறு பகுதிகளிலும் பரவலாக தொடர் மழை பெய்து வருகிறது. மேலும், தென் மேற்கு வங்கக் கடலின் மத்திய பகுதியில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி தீவிரமடைந்து வருவதால் தமிழகத்திற்கு ஆரஞ்சு அலர்டும் கொடுக்கப்பட்டுள்ளது.
இதன் காரணமாக கடலோர பகுதியை ஒட்டியுள்ள மாவட்டங்களில் தொடர்ச்சியாக மழை பெய்து வருகிறது. எனவே, தூத்துக்குடி, கன்னியாகுமரி, ராமநாதபுரம், மயிலாடுதுறை, திருவாரூர், புதுக்கோட்டை, கடலூர் மற்றும் நெல்லை ஆகிய மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் தொடர்ச்சியாக கனமழை பெய்து வருவதால் அங்கு மட்டும் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
அவரை சமாளிப்பது எல்லாம் திமுகவுக்கு தூசு மாதிரி…அமைச்சர் ரகுபதி விமர்சனம்..சீமான் சொன்ன பதில்?
March 2, 2025
குட் பேட் அக்லி படத்தில் அஜித் போட்டிருக்கும் டிரஸ் எவ்வளவு தெரியுமா? விலை கேட்டா ஷாக் ஆயிடுவீங்க!
March 2, 2025