சொதப்பலாக விளையாடிய விண்டீஸ்; பங்காளதேஷ்க்கு 143 ரன் இலக்கு!
வெஸ்ட் இண்டீஸ் அணி 20 ஓவர் முடிவில் 7 விக்கெட்டை இழந்து 142 ரன்கள் எடுத்தனர்.
ஐசிசி T20 உலகக் கோப்பை தொடரின் இன்றை தினத்தில் இரண்டு போட்டிகள் நடைபெறுகிறது. முதல் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணியும், பங்களாதேஷ் அணியும் மோதி வருகிறது. போட்டியில் டாஸ் வென்ற பங்களாதேஷ் அணி முதலில் பந்து வீச முடிவு செய்தது.
வெஸ்ட் இண்டீஸ் அணியின் தொடக்க வீரராக கிறிஸ் கெய்ல், எவின் லூயிஸ் இருவரும் களமிறங்கினர். ஆட்டம் தொடங்கிய சிறிது நேரத்திலேயே கிறிஸ் கெய்ல் 4, எவின் லூயிஸ் 6 ரன்கள் எடுத்து அடுத்தடுத்து விக்கெட்டை இழந்தனர். பின்னர் களமிறங்கிய ஷிம்ரோன் ஹெட்மியர் வந்த வேகத்தில் 9 ரன்கள் எடுத்து வெளியேறினார்.
அடுத்து இறங்கிய கீரன் பொல்லார்ட் 8 ரன் எடுத்த போது மைதானத்தை விட்டு வெளியேறினார். அடுத்து வந்த ஆண்ட்ரே ரஸ்ஸல் ஒரு பந்து கூட சந்திக்காமல் ரன் அவுட் ஆனார். பிறகு ரோஸ்டன் சேஸ், நிக்கோலஸ் பூரன் இருவரும் ஜோடி சேர்ந்து சீரான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் எண்ணிக்கையை உயர்த்தினர். அதிரடியாக விளையாடிய நிக்கோலஸ் பூரன் 40 ரன்கள் எடுத்தார். அதில், 4 சிக்ஸர் , 1 பவுண்டரி அடங்கும்.
அடுத்த பந்திலே ரோஸ்டன் சேஸ் போல்ட் ஆகி 39 ரன் எடுத்து பெவிலியன் திரும்பினார். இறுதியாக வெஸ்ட் இண்டீஸ் அணி 20 ஓவர் முடிவில் 7 விக்கெட்டை இழந்து 142 ரன்கள் எடுத்தனர். பங்களாதேஷ் அணியில் ஷரீபுல் இஸ்லாம், முஸ்தாபிசுர் ரஹ்மான், மெஹ்தி ஹசன் தலா 2 விக்கெட்டை பறித்தனர்.