எடப்பாடி பழனிசாமி மருத்துவமனையில் அனுமதி…!
தமிழக எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி தனியார் மருத்துவமனையில் அனுமதி.
அதிமுக இணை ஒருங்கிணைப்பாளரும், தமிழக எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி தனியார் மருத்துவமனையில் இன்று காலை அனுமதிக்கப்பட்டார். பரிசோதனை முடிந்த பின் இன்று வீடு திரும்புவார் எனக் கூறப்படுகிறது.
குடலிறக்க அறுவை சிகிச்சை மேற்கொண்ட நிலையில் பரிசோதனைக்காக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. சட்டசபை தேர்தல் பிரசாரத்தின் போது குடலிறக்கம் பிரச்சனைக்காக கடந்த ஏப்ரல் மாதம் எடப்பாடி பழனிசாமி அறுவை சிகிச்சை செய்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.