மதுரையில் தேவர் சிலைக்கு சசிகலா மரியாதை!
முத்துராமலிங்க தேவரின் 114-வது ஜெயந்தியை முன்னிட்டு மதுரையில் உள்ள அவரது திருவுருவ சிலைக்கு மரியாதை செலுத்திய சசிகலா.
பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் 114-வது ஜெயந்தியை முன்னிட்டு மதுரை கோரிப்பாளையத்தில் உள்ள அவரது திருவுருவ சிலைக்கு சசிகலா மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இதனைத் தொடர்ந்து ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன் கிராமத்தில் அமைந்துள்ள முத்துராமலிங்க தேவரின் மணிமண்டபத்தில் உள்ள சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்துகிறார்.
நாளை பசும்பொன்னில் தேவர் ஜெயந்தி விழா நடைபெறவுள்ள நிலையில், இன்றே மரியாதை செய்தார் சசிகலா. இதனிடையே, ஜெயலலிதா பயன்படுத்திய தேர்தல் பரப்புரை வாகனத்தில் சசிகலா தனது அரசியல் சுற்றுப்பயணத்தை தொடங்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.