தன்னார்வலர்கள் தேர்வில் பெண்களுக்கு முன்னுரிமை! – அமைச்சர் அன்பில் மகேஷ் அறிவிப்பு!

Default Image

இல்லம் தேடி கல்வி குறித்து சில தலைவர்கள் எச்சரித்திருப்பதை ஏற்றுக் கொள்கிறோம் என அமைச்சர் அன்பில் மகேஷ் பேட்டி.

பள்ளி மாணவர்களின் கற்றல் இடைவெளியை சரிசெய்யும் விதமாக மு.க.ஸ்டாலின் தலைமையிலான தமிழக அரசு இல்லம் தேடி கல்வி திட்டத்தை கொண்டு வந்துள்ளது. அதன்படி, இல்லம் தேடி கல்வி திட்டத்தை நேற்று விழுப்புரம் மாவட்டம் மரக்காணத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

இந்த திட்டத்திற்காக 200 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், இன்று செய்தியாளர்களிடம் பேசிய பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, முதல்கட்டமாக 12 மாவட்டங்களில் இல்லம் தேடி கல்வி திட்டம் செயல்படுத்தப்படுகிறது என்றும்  இடைநிற்றலை குறைப்பதற்கான வழிவகையாக இல்லம் தேடி கல்வி திட்டம் அமையும் எனவும் தெரிவித்தார்.

முற்றிலும் மாநில அரசின் நிதியில் இத்திட்டம் செய்லபடுகிறது. எச்சரிக்கை உணர்வுடன்தான் தன்னார்வலர்கள் தேர்தெடுக்கப்படுகின்றன. தன்னார்வலர்கள் தேர்வில் பெண்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என கூறினார்.

சில கட்சி தலைவர்கள் கூறியுள்ள எச்சரிக்கை உணர்வுடன்தான் இந்த திட்டத்தை அரசு செயல்படுத்தி வருகிறது என்று இல்லம் தேடி கல்வி திட்டம் தொடர்பாக எழுந்துள்ள விமர்சனங்களுக்கு அமைச்சர் விளக்கமளித்துள்ளார்.

மேலும், 1-ஆம் தேதி முதல் 1 முதல் 8ம் வகுப்புகளுக்கு பள்ளிகள் திறக்கப்பட உள்ள நிலையில், பள்ளிக்கு கட்டாயம் மாணவர்கள் வரவேண்டும் என்று எந்தவொரு நிபந்தனையும் விதிக்கப்பவில்லை என்றும் குறிப்பிட்டுள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்