அறங்காவலர்களை நியமிக்கும்வரை கோயில் நகைகளை உருக்கக்கூடாது – உயர்நீதிமன்றம் உத்தரவு

Default Image

அறங்காவலர்களை நியமிக்கும் வரை கோயில் நகைகளை உருக்குவது தொடர்பாக முடிவெடுக்க கூடாது என உயர்நீதிமன்றம் உத்தரவு.

அறங்காவலர்களை நியமிக்கும் வரை கோயில் நகைகளை உருக்குவது தொடர்பாக எந்தவித முடிவெடுக்க கூடாது என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அறங்காவலர்கள் நியமனத்திற்கு பிறகே கோயில் நகைகள் உருக்கப்படும் என தமிழக அரசு நீதிமன்றத்தில் உறுதி செய்ய வேண்டும் என்றும் கூறியுள்ளது.

கோயில்களுக்கு காணிக்கையாக வழங்கபட்ட நகைகளை கணக்கெடுப்பு தடையில்லை என்றும் அறங்காவலர்களை நியமிக்காமல் கோயில் நகைகளை உருக்க தடைகோரிய வழக்கில் தமிழக அரசு பதிலளிக்க எனவும் ஆணையிட்டுள்ளது.

மேலும், அறங்காவலர்கள் நியமனத்திற்கு பிறகே கோயில் நகைகள் உருக்கப்படும் என்று தமிழக அரசு தரப்பில் வாதம் வைக்கப்பட்டதை தொடர்ந்து, இண்டிக்ட் கலெக்டிவ் அறக்கட்டளை தொடர்ந்த வழக்கின் விசாரணை டிசம்பர்15ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

Election Result
gold rate
AUSvsIND
Good Bad Ugly
Congress - BJP
Low pressure area
Valery Zaluzhny