#BREAKING: நீட் முடிவை வெளியிட தடையில்லை – உச்சநீதிமன்றம் உத்தரவு
நீட் இளநிலை மருத்துவ நுழைவுத்தேர்வு முடிவுகளை வெளியிட தடையில்லை என்று உச்சநீதிமன்றம் உத்தரவு.
இளநிலை மருத்துவ படிப்புக்கான நீட் நுழைவுத்தேர்வு முடிவை வெளியிட தடை இல்லை என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நீட் யூ.ஜி. தேர்வை 2 மாணவர்களுக்கு மட்டுமே நடத்த வேண்டும் என்றும் 2 மாணவர்களுக்கு நீட் மறுதேர்வு நடத்திய பின்னரே முடிவை வெளியிட வேண்டும் எனவும் மும்பை உயர்நீதிமன்ற பிறப்பித்த உத்தரவுக்கு தடை விதித்து உச்சநீதிமன்ற ஆணையிட்டுள்ளது.