கேரள மக்களுக்கு உதவ அறிவுறுத்தல் – முதல்வர் மு.க.ஸ்டாலின்!
மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கேரள மக்களுக்கு உதவ எல்லையோர மாவட்ட ஆட்சியர்களுக்கு அறிவுறுத்தியுள்ளதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
கேரள மாநிலத்தில் கடந்த 2 வாரங்களுக்கு மேலாக பல்வேறு பகுதிகளிலும் பரவலாக தொடர் கனமழை பெய்து வருகிறது. கனமழை காரணமாக ஏற்பட்ட வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி பலர் உயிரிழந்து வருகின்றனர். இந்நிலையில் கேரளாவில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவ தமிழக அரசு தயாராக இருப்பதாக கேரள முதல்வர் பினராயி விஜயன் அவர்களுக்கு தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் அவர்கள் கடிதம் எழுதியுள்ளார்.
மேலும் இது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் முதல்வர் அவர்கள் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கேரள மக்களுக்கு உதவுவதற்கு தமிழ்நாட்டின் எல்லையோர மாவட்ட ஆட்சித் தலைவர்களுக்கு அறிவுறுத்தி உள்ளதாகவும், முல்லைப் பெரியாறு அணை தொடர்பாக இரண்டு மாநில மக்களின் நலனும் பாதுகாக்கப்பட தமிழ்நாடு அரசு உறுதி செய்யும் எனவும் தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் அவர்கள் கேரள முதல்வர் பினராயி விஜயன் அவர்களுக்கு எழுதியுள்ள கடிதத்தில் கூறப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதோ அந்த பதிவு,
அண்மையில் கேரளத்தில் ஏற்பட்ட வெள்ளப் பாதிப்புகள் தொடர்பாக நமது அக்கறையை வெளிப்படுத்தி- அனைத்து வகையிலும் உதவ தமிழ்நாடு அரசு தயாராக இருப்பதைத் தெரிவித்து மாண்புமிகு கேரள முதலமைச்சர் திரு. பினராயி விஜயன் அவர்களுக்குக் கடிதம் எழுதியுள்ளேன். pic.twitter.com/7DVxftQH3z
— M.K.Stalin (@mkstalin) October 27, 2021