#DC v CSK: இறுதி போட்டிக்கு முன்னேறப்போவது யார்? 172 ரன்கள் அடித்த டெல்லி அணி!
ஐபிஎல் தொடரில் முதல் அரையிறுதி ஆட்டத்தில் சென்னை எதிரான போட்டியில் செல்லி அணி 5 விக்கெட் இழப்புக்கு 172 ரன்கள் எடுத்துள்ளது.
ஐபிஎல் தொடரின் முதல் அரையிறுதி போட்டியில் புல்லிங் பட்டியலில் முத்த இரண்டு இடத்தில் இருக்கும் , டெல்லி கேபிடல்ஸ், சென்னை சூப்பர் கிங்ஸ் ஆகிய இரு அணிகளும் விளையாடி வருகிறது. துபாய் சர்வதேச மைதானத்தில் நடைபெற்று வரும் இப்போட்டியில் டாஸ் வென்ற சென்னை முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.
அதன்படி, முதலில் களமிறங்கிய டெல்லி அணி தொடக்க வீரர்களான ஷிகர் தவான் 7 ரன்களில் வெளியேற, அதிரடியாக விளையாடி வந்த பிரித்வி ஷா 34 பந்துகளில் 60 ரன்கள் அடித்து அவுட்டானார். இதன்பின் வந்த அக்சர் படேல் 10 ரன்கள், ஸ்ரேயாஸ் ஐயர் 1 ரன் எடுத்து ஆட்டமிழக்க, கேப்டன் ரிஷப் பந்த் மற்றும் ஷிம்ரான் ஹெட்மியர் நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.
ஹெட்மியர் 37 ரன்களில் விக்கெட்டை இழக்க, ரிஷப் பந்த் 31 பந்துகளில் 51 ரன்கள் அடித்து களத்தில் இருந்தார். இறுதியாக 20 ஓவர் முடிவில் டெல்லி அணி 5 விக்கெட் இழப்புக்கு 172 ரன்களை எடுத்துள்ளது. சென்னை பந்துவீச்சை பொறுத்தளவில் ஜோஷ் ஹேசில்வுட் 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
இந்த நிலையில், 173 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் சென்னை அணி களமிறங்கியுள்ளது. இப்போட்டியில் யார் வெற்றி பெறுவார்கள்? இறுதிப்போட்டிக்கு முன்னேறப்போவது யார் என்று மிகவும் எதிர்பார்க்கப்படுகிறது.